குலோப் ஜாமூன், லட்டு பா.ஜ., கொண்டாட்டம்!!!
சென்னை:நான்கு மாநில சட்டசபை தேர்தலில், பா.ஜ., மிக பெரிய வெற்றி பெற்றதை அடுத்து, தமிழகத்தில் அக்கட்சியினர், மக்களுக்கு குலோப் ஜாமூன், லட்டு உள்ளிட்ட இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் உற்சாகமாக கொண்டாடினர். உ.பி., உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. ஓட்டு எண்ணிக்கை துவங்கியதில் இருந்து, பஞ்சாப் தவிர்த்த மற்ற நான்கு மாநிலங்களிலும், பா.ஜ., முன்னிலை வகித்தது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.