மதுரையில் இரண்டாண்டுகளுக்கு பின் சித்திரை திருவிழா…

மதுரை : உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா, இரண்டு ஆண்டுகளுக்கு பின் பக்தர்களுடன் கோலாகலமாக நடக்க உள்ளது. முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் ஏப்.,14, ஆற்றில் அழகர் இறங்குதல் ஏப்.,16 ஆகிய தேதிகளில் நடக்கிறது. ஏப்.,16ம் தேதி அதிகாலை 5:50 முதல் 6:20 மணிக்குள் வைகையாற்றில் அழகர் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார்.இரு ஆண்டுகளுக்கு பின் மீனாட்சி திருக்கல்யாணத்தையும், ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியையும் நேரில் பார்க்க இருப்பதால் பக்தர்கள் உற்சாகத்துடன் எதிர்நோக்கி உள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்