5 வயது மாணவன் தாக்கி வகுப்பாசிரியை மயக்கம்!!

புளோரிடா: அமெரிக்காவில் ஐந்து வயது மாற்றுத் திறனாளி மாணவன் தாக்கியதில் ஆசிரியை மயக்கம் அடைந்தார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ளது, ‘பைன்ஸ் லேக்ஸ்’ ஆரம்பப் பள்ளி’. 800 மாணவர்களுக்கு மேல் படிக்கும் இப்பள்ளியில், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு உள்ளது. இவ்வகுப்பில் 5 வயதுடைய மாணவர்கள் இருவர், கையில் கிடைத்த பொருட்களை ஒருவர் மீது ஒருவர் வீசி கலாட்டாவில் ஈடுபட்டுள்ளனர். இதைக் கண்டித்த ஆசிரியை அந்த மாணவர்களை தனி அறையில் அடைக்க அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது ஒரு மாணவன் கை முஷ்டியால் ஆசிரியரை ஓங்கி குத்தியுள்ளான். அத்துடன் காலால் எட்டி உதைத்துள்ளான். இதில், 40 வயதான அந்த ஆசிரியை நிலைகுலைந்து மயங்கி சரிந்துள்ளார். தகவல் அறிந்து வந்த பள்ளி ஊழியர்கள் நினைவிழந்து கிடந்தவரை, ‘ஸ்ட்ரெச்சரில்’ படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிகிச்சைக்குப் பின் நினைவு திரும்பிய ஆசிரியை வீட்டுக்குச் சென்றுள்ளார். ஆசிரியை தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.