ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால், லக்‌ஷயா சென் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் போட்டி முல்கேம் அன்டெர் ரூ நகரில் நேற்று தொடங்கி 13-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தனது முதல் சுற்று ஆட்டத்தில் சிங்கப்பூரை சேர்ந்த யோ ஜியா மின்னை எதிர்கொண்டார்.  47 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில், அவர் 21-15, 17-21, 21-14 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார்.

மற்றொரு போட்டியில், லக்‌ஷயா சென், தாய்லாந்தின் கன்டாபோன் வாங்சரோனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். 47 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில், அவர் 21-6, 22-20 ன்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில்நடைபெற்ற போட்டியில்,  துருவ் கபிலா-எம்.ஆர்.அர்ஜூன் ஜோடியும், தோல்வியடைந்தனர்.
முன்னதாக நடைபெற்ற போட்டிகளில் இந்தியாவின் பி.வி.சிந்து மற்றும் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றனர். சிந்து தனது அடுத்த போட்டியில் ஸ்பெயினின் பீட்ரிஸ் கொரேல்ஸ் அல்லது சீனாவின் சாங்-இ-மானை எதிர்கொள்வார். ஸ்ரீகாந்த் அடுத்த போட்டியில் சீனாவின் லூ குயாங் சுவை எதிர்கொள்வார். 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.