விமானம் மூலம் சென்னை ஐஐடி பயணம் சென்ற 23 மாணவர்கள்!!!
தூத்துக்குடி: தூத்துக்குடியிலிருந்து அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் 23 பேர் விமானம் மூலம் சென்னை ஐஐடி பயணம் மேற்கொண்டுள்ளனர். அரசு பள்ளி மாணவர்களின் எட்டாக்கனியாக உள்ள ஐஐடி போன்ற மத்திய அரசு படிப்புகளில் சேரும் கனவை நிறைவேற்றும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜேஇஇ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. திருச்சி என்.ஐ.டி நிறுவனம் இலவசமாக இந்த பயிற்சியை அளித்து வருகிறது. பயிற்சியின் ஒரு பகுதியாக இன்று மாணவர்கள் சென்னை ஐஐடி-க்கு தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்