சூரியகாந்தி எண்ணெய்யை மறந்திடுங்க; இல்ல மாறிடுங்க!!!
சேலம்: ரஷ்யா – உக்ரைன் போர் முடியும் வரை, சூரியகாந்தி எண்ணெய் வரத்து இருக்காது என்பதால், அதை மறந்து கடலை எண்ணெய்க்கு மாற, சேலம் மாவட்ட தாவர எண்ணெய் உற்பத்தியாளர், விற்பனையாளர்கள் சங்க தலைவர் சந்திரகாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அர்ஜென்டினாவில் ‛ஆர்டர்’ கொடுத்தால், கப்பலில் இந்தியா வர 45 நாட்கள் முதல், இரண்டு மாதமாகும். அதனால், இன்னும் நான்கு மாதங்களுக்கு சூரியகாந்தி எண்ணெயை மக்கள் மறந்துவிட வேண்டியது தான். சூரியகாந்தி பயன்படுத்தியோர், கடலை எண்ணெய், தவிட்டு எண்ணெய், கடுகு எண்ணெய்க்கு மாறிக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். சூரியகாந்தி எண்ணெய் வரத்து இல்லாததால், பாமாயில் விலை உயர்ந்து, நேற்று லிட்டர் 160 ரூபாய்க்கு விற்பனையானது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்