கோவையில் பம்ப் தொழில் முடங்கும் அபாயம்!!!
கோவை: மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், பம்ப்செட் தொழில் முடங்கும் நிலையை நோக்கி பயணிப்பதாக, தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்கம் (சீமா) கவலை தெரிவித்துள்ளது. இரும்புத்தாது நம் நாட்டிலேயே வெட்டி எடுக்கப்படும் நிலையில், இரும்பு மற்றும் ஸ்டீலின் விலை உயர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி, கடந்த ஒன்றரை ஆண்டாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு தலையிட்டு,விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.தவறும் பட்சத்தில், ஒரு லட்சம் பேருக்கு வேலையளித்து, ஆண்டுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் உற்பத்தி திறன் கொண்ட கோவை பம்ப்செட் தொழில், வரும் சில வாரங்களில் முடங்கும் நிலை உருவாகும்.இவ்வாறு, கார்த்திக் கூறினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்