ஆந்திரா தியேட்டர்களில் டிக்கெட் விலை உயர்வு!!!

ஆந்திராவில் தியேட்டர் கட்டணங்கள் சில மாதங்களுக்கு முன்பு குறைக்கப்பட்டது. இதை தொடர்ந்து பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களுக்கான வசூலும் பாதிக்கப்பட்டது. உடனே நடிகர்கள் சிரஞ்சீவி, மகேஷ் பாபு, பிரபாஸ், இயக்குனர்கள் ராஜமவுலி, கொரட்டாலா சிவா உள்பட தெலுங்கு திரையுலகினர், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து பேசினர். தியேட்டர் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், நேற்று முதல் தியேட்டர் கட்டணத்தை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களில் ரூ.125 கட்டணமாகவும், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ரூ.150 கட்டணமாகவும் வசூலிக்கப்படும். இத்துடன் ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும். நகர்ப்புற தியேட்டர்களில் மட்டுமின்றி, கிராமப்புற தியேட்டர்களிலும் இந்த மாற்றம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.100 கோடிக்கு மேல் உருவான படங்களுக்கு டிக்கெட் விலையை உயர்த்திக் கொள்ளலாம். அந்தப் படங்களின் 20 சதவீத படப்பிடிப்பு ஆந்திராவில் நடந்திருக்க வேண்டும் என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. பிர பாஸ் நடித்த ராதே ஷ்யாம், ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர், மகேஷ் பாபு நடித்த சர்காரு வாரி பட்டா உள்பட சில படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ள நிலையில் தியேட்டர் டிக்கெட் விலை உயர்ந்துள்ளதால், திரையுல கினர் மகிழ்ச்சி அைடந்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.