மது விலையை தொடர்ந்து மின் கட்டணமும் உயர்கிறது!!!

சென்னை :கடும் நிதி நெருக்கடியை சமாளிக்க, மின் கட்டணத்தை, 20 சதவீதம் வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின் கட்டணம் நிர்ணயம் செய்தல், மின் வாரிய செயல்பாட்டை கண்காணித்தல், மின் வாரியம் மற்றும் மின் நிறுவனங்கள் இடையிலான பிரச்னைக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட பணிகளை, மின்சார ஒழுங்குமுறை ஆணையமே மேற்கொள்கிறது. வீடுகளுக்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவதற்காக, அரசு வழங்கும் மானிய தொகை மட்டும் குறைக்கப்பட்டதால், அரசின் மானிய செலவு சற்று குறைந்தது. இதனால் தற்போது வரை, 2014ல் நிர்ணயிக்கப்பட்ட மின் கட்டணமே நடைமுறையில் உள்ளது. பின், 2019ல், 30 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.