திருச்சி திருவானைக்காவல் ‘அகிலா’ யானையின் சேட்டையை பாருங்க!!!

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் யானை அகிலா மண் குளியல் காட்சிகளை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்பட்டு இந்த கோயிலில் இறை பணியாற்றி வரும் யானை அகிலாவிற்கு ஏற்கனவே குளிப்பதற்காக நீச்சல்குளம் கட்டப்பட்டு உள்ளது. ரூ.50,000 மதிப்பில் களிமண், செம்மண் , மணல் ஆகியவைகள் சுமார் ஒன்றரை அடி உயரம் கொட்டப்பட்டு உள்ளது இதில் உப்பும் சேர்க்கப்பட்டுள்ளது. இன்று அந்த களிமண்ணில் நீர் நிரப்பப்பட்டது அதனைத் தொடர்ந்து யானை அகிலா அந்த சேற்று குளத்திற்குள் இறக்கப்பட்டது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்