3 கிலோ நகை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது..
திருப்பூர் நகைக்கடை கொள்ளையில் மூளையாக செயல்பட்ட முர்டாஷா என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் புதுராம கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரின் நகைக்கடையில் 3.25 கிலோ தங்க நகைகள், 28 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் ரூ. 14.50 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். தனிப்படை போலீசார் விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டது பீகார் மாநிலத்தை சேர்ந்த மஹ்தாப் ஆலம், பத்ருல் (27), திலாகாஸ்(20), முகமது சுப்ஹான் (30) என்பது தெரியவந்தது. அவர்களை நாக்பூர் அருகே ரெயிலில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.