பைஜூஸ் நிறுவனத்தின் சீருடை ஸ்பான்சர் மேலும் ஒரு ஆண்டு நீட்டிப்பு..

இந்திய கிரிக்கெட் அணியின் சீருடை ஸ்பான்சராக பைஜூஸ் நிறுவனம் 2019-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறது. இலங்கைக்கு எதிரான போட்டி தொடருடன் பைஜூஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் முடிவதாக இருந்தது. 
இந்த நிலையில் பைஜூஸ் நிறுவனத்தின் சீருடை ஸ்பான்சர் ஒப்பந்தம் மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.