இந்தியா – சீனா இடையே பிளவு ஏற்படுத்தும் சக்திகள்: சீன வெளியுறவு அமைச்சர் குற்றச்சாட்டு!!!
இந்தியா எங்களுக்கு கூட்டாளியாக இருக்க வேண்டும். இந்தியா, சீனா இடையே சில சக்திகள் பிளவை ஏற்படுத்துகின்றன’ என்று சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங் யீ விருப்பம் தெரிவித்தார். சீனாவின் நாடாளுமன்ற கூட்டம் நேற்று துவங்கியது. இதையொட்டி சீனாவின் வெளியுறவு துறை அமைச்சர் யாங் யீ நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது, ‘‘கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவில் சில பின்னடைவுகள் ஏற்பட்டன. இது இரு நாடுகளுக்கும் மக்களின் அடிப்படை நலன்களை பூர்த்தி செய்ய உதவாது. இரு நாடுகளின் உறவு பரஸ்பர வீழ்ச்சிக்காக அல்லாமல் பரஸ்பர வெற்றிக்கானதாக அமைய வேண்டும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.