இதுவரை 1,300 தமிழக மாணவர்கள் உக்ரைனிலிருந்து இந்தியா வந்துள்ளனர்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
போர் மூண்டுள்ள உக்ரைனில் இருந்து இதுவரை 1,300 தமிழ்நாட்டு மாணவர்கள் இந்தியா வந்து சேர்ந்துள்ளனர். திங்கள்கிழமை இரவு டெல்லி வந்த விமானத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 80 மாணவர்கள் திரும்பியதாக டி.ஆர்.பி.ராஜா தகவல் அளித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, டெல்லி விமான நிலையத்தில் மாணவர்களுக்கு உதவ மையம் திறக்கப்பட்டுள்ளது; உதவி மையம் மூலம் மாணவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படுவதாக எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.