கேக் தயாரிப்பு: பெண் சாதனை!!!

டேராடூன் : உத்தரகண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்தவர் பிராச்சி தாபல் தேப்,30. இவர், பிரிட்டனில் உள்ள கேக் கலைஞர் எடீ ஸ்பென்ஸ் என்பவரிடம் கேக் தயாரிக்கும் கலையை பயின்றுள்ளார். அதிலும், ‘ராயல் ஐசிங்’ எனப்படும் மிகவும் நுணுக்கமான வடிவமைப்புகள் கொண்ட கேக் தயாரிப்பதில் தேர்ச்சி பெற்றவர். தற்போது, ஐரோப்பிய நாடான இத்தாலியில் உள்ள கதீட்ரல் தேவாலயத்தை, 6 அடி, 4 அங்குல நீளம்; 4 அடி 6 அங்குல உயரம்; 3 அடி 10 அங்குல அகலத்தில், 100 கிலோ எடையில் கேக்கில் படைத்துள்ளார். பிராச்சியின் இந்த படைப்பு, ‘வேர்ல்ட் புக் ஆப் ரிகார்ட்ஸ்’ எனப்படும், உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த கேக், முட்டை பயன்படுத்தாமல், முற்றிலும் சைவ கேக்காக தயாரிக்கப்பட்டுள்ளது என்பது இதன் மற்றொரு சிறப்பு.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி குணசேகரன்