விற்பனைக்காக தர்ப்பூசணி பழங்கள் குவிப்பு….

தமிழகமெங்கும் தற்பொழுது வெப்பநிலை அதிகரித்து வருகிறது. கோடை காலத்தை முன்னிட்டு வெப்பத்தைத் தணிக்க குளிர்பானம் மற்றும் தர்ப்பூசணி, வெள்ளரி, பழரசம் போன்றவற்றை மக்கள் உட்கொள்வார்கள். இதில் நீர்ப்பழம் என்கின்ற தர்ப்பூசணி தாகத்தை தனிப்பதில் முக்கிய இடம் வகிக்கிறது. அந்த வகையில் பல்லடம் பகுதியில் தற்போது தர்ப்பூசணி விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இது குறித்து பல்லடத்தை  சேர்ந்த தர்பூசணி வியாபாரி ஒருவர் கூறியதாவது: திண்டிவனம் மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் விளைந்த தர்ப்பூசணியை விற்பனைக்கு கொண்டு வருகிறோம். அதிக மழையால் தர்ப்பூசணி விளைச்சல் குறைந்து போயுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.