புதிய படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா!!!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. ‘ஜனகனமன…’, ‘அகிலன்’ உள்ளிட்ட படங்களின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்குனர் அகமது டைரக்டு செய்ய இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜெயம் ரவி-நயன்தாரா கூட்டணியில் ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘தனி ஒருவன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் ஜெயம் ரவி-நயன்தாரா கூட்டணி மீண்டும் படத்தில் இணைந்து நடிக்க இருப்பது அவர்களின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.