ரேஷன் கடைகளில் கையாடல்!!!

சென்னையில் ரேஷன் கடைகளில் கையாடல் செய்ததாக 15 ரேஷன் கடை ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ப்ராக்ஸி முறையில் பட்டியலிட்டு வழங்காமல் அத்தியாவசியப் பொருட்களை பணியாளரால் கையாடல் செய்யப்பட்டுள்ளது.சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைப் பணியாளர்களின் மீது தகுந்த ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரத்தை அரசுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இனிவரும் காலங்களில் இத்தவறுகள் ஏற்படாவண்ணம் நியாய விலைக் கடைகளை கண்காணிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ்.