டார்கெட்டை முடிக்க புரோக்கர்களின் அடாவடி !!!!
டார்க்கெட் முடிக்க வேண்டும் என்பதற்காக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள வேம்பார் பகுதியை சேர்ந்த அப்பாவிகள், மதுவிற்கு அடிமையானவர்களை வலுகட்டயமாக அழைத்து சென்று குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதாக புகார் அளித்துள்ளது.கடந்த மாதம் 25ந்தேதி முத்துச்சேர்மன் மனைவி வேலைக்கு சென்று விட, குழந்தைகள் பள்ளிக்கு சென்று விட, முத்துச்சேர்மன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சூறவாளி என்று அழைக்கப்படும் நபர் மற்றும் சிலர் விறகு வெட்டும் வேலை உள்ளது கொஞ்சம் நேரம் தான் என்று கூறி முத்துச்சேர்மனை அழைத்துச்சென்றுள்ளனர்.தன்னை வேலைக்கு என்று அழைத்து சென்று, ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று, வலுக்கட்டயமாக வாயில் பஞ்சினை வைத்து தனக்கு குடும்பக்கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்து விட்டதாகவும், தனக்கு அதிகமாக வலி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.