பேருந்து நிலைய கழிவறையில் மயங்கி விழுந்து நடத்துனர் மரணம்!!!
தருமபுரி நகர பேருந்து நிலைய கழிவறையில் மயங்கி விழுந்த அரசு பேருந்து நடத்துனர் பழனிசாமி உயிரிழந்த சம்பவம் . பொம்மிடி – ஓசூர் இடையே இயக்கப்பட்ட அரசு பேருந்து நடத்துனர் பழனிசாமி உயிரிழந்தார். ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம்போல் பணிக்கு வந்த பழனிசாமி தருமபுரி பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி கழிவறைக்கு இயற்கை உபாதைக்காக சென்றார். நீண்ட நேரமாகியும் திரும்பாததால் உடன் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் சக பணியாளர்கள் கழிவறைக்குள் சென்று தேடினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பழனிசாமியின் உடலை மீட்பு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.