1ம் வகுப்பு சேர புதிய கட்டுப்பாடு; அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்!!!
மத்திய அரசுக்கு சொந்தமான கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகள் விருதுநகரிலும் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் முதல் வகுப்பில் சேர 5 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் என்பது இதுவரை விதியாக இருந்தது.இந்த நிலையில் மத்திய அரசு இந்த ஆண்டு 6 வயது முதல் 8 வரை உள்ள குழந்தைகளை 1ம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று புதிய விதிகளை அறிவித்துள்ளதால் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழக குழந்தைகளை சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி