வார்னே மறைவுக்கு சச்சின், விராட் கோலி உள்ளிட்டோர் இரங்கல்..!!
வார்னேவின் திடீர் மறைவு கிரிக்கெட் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு கிரிக்கெட் நட்சத்திரங்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வார்னேவின் மறைவு அதிர்ச்சி அளிப்பதாகவும், நம்பமுடியவில்லை என்றும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெரிவித்துள்ளார். வார்னேவுடன் கழித்த பொழுதுகளை என்றும் மறக்க முடியாது என்று களத்தில் நமக்குள் இருந்த போட்டிகள் எனக்கு பொக்கிஷம் போன்றவை என்று சச்சின் குறிப்பிட்டுள்ளார்.
என்னால் தற்போது பேச முடியவில்லை. அதிர்ச்சியில் உள்ளேன் என்று வெஸ்டர்ன் டிஸ்ட் ஜாம்பவான் பிரையன் லாரா கூறியுள்ளார். எனது துயரத்தை வார்த்தையால் கூற முடியவில்லை. கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த வீரரை இழந்துவிட்டோம் என்றே லாரா கூறியிருக்கிறார். வார்னே மறைவு குறித்து பதிவிட்டுள்ள விராட் கோலி, வாழ்க்கையை யூகிக்க முடியவில்லை. இந்த இழப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பந்தை உங்களை போல் வேறு யாரும் திருப்பியதே இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இது கிரிக்கெட் ஜாம்பவான் வரலாற்றில் சிறந்த வீரர் நம்மை விட்டு போய்விட்டார். இப்போதும் என்னால் நம்ப முடியவில்லை. வாயடைத்துப்போய் நிற்கின்றேன் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா குறிப்பிட்டுள்ளார். வார்னேவின் மறைவு மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், இவ்வளவு சின்ன வயதில் சென்றுவிட்டார். கிரிக்கெட் ரசிகர்களுக்கும், அவருடன் விளையாடிய வீரர்களுக்கும், வார்னேவின் குடும்பத்தினருக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.