கிரிமினல் கைகளில் ராணுவ துப்பாக்கிகள் அட்டூழியம் ஆரம்பிச்சிடுச்சு…: ஜெலன்ஸ்கி செய்தது முட்டாள்தனமா?

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததும், பொதுமக்களையும் போர்க்களம் காண அழைத்தார் அதிபர் ஜெலன்ஸ்கி. ரஷ்ய படைகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக அவர்களுக்கு நவீன துப்பாக்கிகளையும் வழங்கி உள்ளார். இதுபோல், 40 லட்சம் பேருக்கு அவர் துப்பாக்கிகள் வழங்கி இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதோடு, ரஷ்ய படைகள் மீது தாக்குதல் நடத்த விரும்பும் வெளிநாடுகளை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள், துப்பாக்கி சுட தெரிந்தவர்களுக்கும் எல்லைகளை திறந்து விட்டு, ஆயுதங்களை வாரி கொடுத்துள்ளார். ஜெலன்ஸ்கியின் இந்த முடிவு, ஆரம்பக் கட்டத்திலேயே சர்ச்சைக்கு உள்ளானது. பொதுமக்களிடம் வழங்கிய இந்த துப்பாக்கிகள், எதிர்காலத்தில் சட்ட விரோத காரியங்களுக்கு பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கருதப்பட்டது. ஆனால், எதிர்காலம் வரை காத்திருக்காமல், துப்பாக்கிகள் கிடைத்த கிரிமினல்கள் இப்போதே அட்டூழியங்களை அரங்கேற்ற தொடங்கி உள்ளனர்.   

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.