‘ரஷ்ய அதிபர் புதினை கொல்வது அமெரிக்காவின் நோக்கம் அல்ல’: செனட்டரின் சர்ச்சை பேச்சுக்கு வெள்ளை மாளிகை விளக்கம்..!!
வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் புதினை கொல்வது, ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது அமெரிக்காவின் நோக்கம் அல்ல என்று வெள்ளை மாளிகை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் புதின் கொல்லப்பட வேண்டும் என்று குடியரசு கட்சியின் செனட் உறுப்பினர் லென்ஸே ஆபிரகாம் பேசிய மறுநாளே வெள்ளை மாளிகையில் இருந்து இந்த அவசர விளக்கம் வெளியாகியுள்ளது. ரஷ்யாவுடன் அமெரிக்கா ஒருபோதும் போரிடாது என்றும் அவ்வாறான திட்டமோ, கொள்கையோ அல்லது எண்ணமோ சிறிதளவும் இல்லை என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.