ATM-ல் கிடந்த பணக்கட்டுகள்; டி.வி நிருபர் எடுத்த செம முடிவு!!!
ஏடிஎம் இயந்திரம் அருகே பணக்கட்டுகள் கிடந்தது. இதை பார்த்த டிவி நிருபர் எடுத்த முடிவு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தனியார் தொலைக்காட்சியில் நிருபராக வேலை செய்பவர் கார்த்திக். நேற்று மாலை சென்னை எம்ஜிஆர் நகர், பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அந்த ஏடிஎம் இயந்திரம் அருகே 500 ரூபாய் நோட்டுகள் 2 கட்டு கிடந்ததை பார்த்துள்ளார். பின்னர் அந்த பண கட்டுகள் குறித்து எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்துக்கு சென்று போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.