சென்னை மேயர் பிரியாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா???

சென்னை மாநகராட்சியின் முதல் பட்டியலின பெண் மேயராக 74-வது வார்டில் வெற்றி பெற்ற பிரியா ராஜன். சென்னை மாநகராட்சியின் முதல் தலித் பெண் மேயர். பிரியா ராஜன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செங்கை சிவத்தின் பேத்தி ஆவார். இவரது தந்தை பி.ராஜன், அப்பகுதியின் தி.மு.க துணைச்செயலாளராக இருந்து வருகிறார். 28 வயதான பிரியா ராஜன் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.காம் படித்துள்ளார். இந்தநிலையில், பிரியா ராஜனின் சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது. அவருக்கு ரூ.8,24,941 மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளன. அசையா சொத்து மற்றும் சுய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்ட சொத்துகள் அவரிடம் இல்லை.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.