தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசிய அஜித் ரசிகர் கைது !!!
வலிமை படம் வெளியிடப்பட்டிருந்த கோவை தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசியதாக அஜித் ரசிகர் கைது செய்யப்பட்டுள்ளார். நவீன்குமார் ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி டிக்கெட்டை 1,500 ரூபாய் வீதம் விற்று இருக்கிறார். இதில் அதிர்ச்சி அடைந்த லட்சுமணன் அவரது நண்பர்கள் நான்கு பேர் கூட்டு சேர்ந்துகொண்டு நவீன்குமாரிடம் சென்று வாக்குவாதம் செய்து விட்டு திரும்பியுள்ளனர். அந்த நிகழ்வின் தொடர்ச்சியாகத்தான் நவீன்குமார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கிறது. இதில் லட்சுமணன் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற நான்கு பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி