ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முதல்வர் அலுவலகத்தில் மனு…
துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி, ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு சார்பில், முதல்வர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. ‘ஸ்டெர்லைட்’ ஆதரவு கூட்டமைப்பில், லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள், கனரக வாகனங்கள் பழுது பார்ப்போர், மூலப்பொருள் சப்ளை செய்வோர், ஒப்பந்ததாரர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் கிராம மக்கள் உள்ளனர்.அனைவரும் ஆலை மூடப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள். ஆலையை மீண்டும் திறந்தால் மட்டுமே, எங்களின் வாழ்வாதாரம் மீட்டெடுக்கப்படும்.துாத்துக்குடியின் பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெற, எங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க, மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை இயங்க வழிவகை செய்ய வேண்டும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மீனா.