84 ஆண்டுகளுக்கு பின் கோடையில் புயல் சின்னம்!!!
சென்னை,: வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெறுவதால், தமிழகத்தின் பல பகுதிகளில், 6ம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அதி கன மழைக்கான, ‘ரெட் அலெர்ட்’ வாபஸ் பெறப்பட்டுள்ளது. 84 ஆண்டுகளுக்கு பின், கோடை காலத்தில் புயல் சின்னம் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1938ம் ஆண்டில் இலங்கையை ஒட்டிய பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. தற்போது 84 ஆண்டுகளுக்கு பின் அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.அதேபோல, 1994 மார்ச்சில் அந்தமான் கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, தாழ்வு மண்டலமாக வலுப்பெறவில்லை. இந்த ஆண்டு கோடை காலத்தை பொறுத்தவரை, முந்தைய ஆண்டுகளை விட, வெப்பம் குறைவாக இருக்கும் என, இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை அலுவலகம் அறிவித்து உள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஜஸ்டின்.