எஸ்.டி.துரைராஜ் அவர்களின் 110 வது ஜனன தினம்.

இன்று பழம்பெரும் மறைந்த நடிகர் எஸ்.டி.துரைராஜ் அவர்களின் 110 வது ஜனன தினம்.1910.12.31 தஞ்சாவூரில் பிறந்தவர் எஸ்.டி.துரைராஜ். “சகுந்தலை”
படத்தில் இவரும் என்.எஸ்.கிருஷ்ணனும் இணைந்து “நீலக்கடல் தானே போவோமே மீன் பிடிப்போமே”என்ற பாடல் காட்சிகளில்
செய்த நகைச்சுவை இன்று வரை பேசப்படும்
உண்மையாகும்.சிறந்த நடிகரான துரைராஜ் பல படங்களில் பிரதான பாத்திரங்களில்
நடித்தவர்.ரம்யையின் காதல்,பிரகலாதா,
மதனகாமராஜன்,ஆயிரம் தலை வாங்கிய
அபூர்வ சிந்தாமணி,ஜெனோவா,ஏழை படும் பாடு,கள்வனின் காதலி,பானை பிடித்தவள் பாக்கியசாலி,படிக்காத மேதை,கப்பலோட்டிய தமிழன்,நிச்சயதாம்பூலம் போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர் திரு.எஸ்.டி.துரைராஜ்.
1986.06.02 அன்று உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.
எதார்த்தம் நிறைந்த நடிப்புக்கு சொந்தக்காரர் திரு. டி.எஸ்.துரைராஜ் அவர்கள்.நடிகர்கள் நம்மை விட்டு எப்போதும் மறைவதில்லை அவர்கள் விட்டுச் சென்ற திரைக்காட்சிகள் மூலம் இன்னும்
வாழ்ந்த வண்ணம் உள்ளனர். கலைஞர்களின் ஜனன,மற்றும் நினைவு நாட்களில் அவர்களை ஞாபகப்படுத்துவது ரசிகர்களின் கடமையாக எண்ணுவோம்.இது ஒன்று தான் நாம் அவர்களுக்கு ஆற்றும் சமர்ப்பணம் ஆகும்.

எஸ். கணேசன் ஆச்சாரி
சதீஷ், கம்பளை இலங்கை.