36-வது தலைவராக பொறுப்பு..
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி 30.12.2020 புதன் மாலை 6.05மணிக்கு இசுலாமியாக் கல்லூரி, கருத்தரங்கக் கூடத்தில் 36ஆம் ஆண்டு ஜேசிஐ தலைவர் பொறுப்பு மகுடம் சூட்டும் விழா இனிதே நடைபெற்றது. இவ்விழாவில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திரு. சிவன் அருள் IAS அவர்கள் கலந்துக் கொண்டு வாணியம்பாடி ஜேசிஐ பாலாறு ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் களையும் அவர்தம் சமுதாயச் செயல்பாடுகளையும் வெகுவாகப் பாராட்டினார்.36ஆவது தலைவராக பொறுப்பு ஏற்றிருக்கும் ஜேசிஐ சு. தணிகைவேல் அவர்கள் பதவி ஏற்கும் முன்னரே கொரோனா தொற்று நோய்க்கு எதிராகவும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் தொய்வில்லாமல் செய்துவந்ததைப் பாராட்டினார். சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் எஸ்தர் ஜெகதீசுவரி அவர்கள் சிறப்புப் பேச்சாளராக, ஜேசி ஐ சு. தணிகைவேல் குறித்தும் ஜேசிஐ வாணியம்பாடி பாலாறின் செயல்கள் குறித்தும் பேசி அரங்கத்தை அதிர வைத்தார். சாசன தலைவர் ஜேசிஐ நா. பிரகாசம், ஜேசிஐ ஆலோசகர் ஜேசிஐ பேரா. தி. மு. அப்துல் காதர் அவர்கள் பாராட்டுரை வழங்க, ஜேசிஐ ஜோசப் செல்வகுமார் அவர்கள் நன்றியுரை ஆற்ற வந்திருந்த அனைவருக்கும் சைவ அசைவ உணவுகள் விருந்தளிக்கப் பட்டது.
தமிழ் மலர் செய்திகளுக்காக. P.சுரேஷ். Reporter. வாணியம்பாடி .