அப்பல்லோ மருத்துவர்கள் 10 பேருக்கு நேரில் ஆஜராக சம்மன்!!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவர்கள் 10 பேருக்கு நேரில் ஆஜராக கோரி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை நிலுவையில் இருந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை காலம் மேலும் 5 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.  இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனையின் நிபுணர்கள் அடங்கிய 6 பேர் கொண்ட மருத்துவ குழு அமைக்கப்பட்டது.  இதில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கிய மற்றும் சிகிச்சையின்போது உடனிருந்த 10 பேர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வரும் திங்கட்கிழமை ஆறுமுகசாமி ஆணையத்தின் நேரடி விசாரணை தொடங்க உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.