சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள்
சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல், கேளிக்கை விடுதிகளில் உள்ள பார்களை இன்று இரவு 10 மணியுடன் மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் மெரினா உள்ளிட்ட கடற்கரை சாலைகள் இன்று இரவு 10 மணியுடன் மூடப்படும் என்றும், சென்னை கடற்கரை சாலையில் முற்றிலும் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பைக் ரேஸ் மற்றும் விபத்துக்களை தடுக்கும் விதமாக சென்னையில் உள்ள மேம்பாலங்கள் இன்று இரவு மூடப்படும் என்றும், சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல், கேளிக்கை விடுதிகளில் தடையை மீறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.