ரஷ்யாவில் ஆப்பிள் நிறுவன பொருட்களின் விற்பனை தற்காலிக நிறுத்தம்….
உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்யாவில் ஆப்பிள் செல்போன் உட்பட அனைத்து மின்ஊடக சாதனைகள் விற்பனையை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கை கண்டித்து ரஷ்யாவின் ஆப்பிள் செல்போன்கள் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ரஷ்யா ஆன்லைன் ஸ்டோர்களிலும் ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. அதே போல் மின்னணு பணப்பரிமாற்ற செயலிகளான ஆப்பிள் பே மற்றும் கூகுள் பே நிறுவனங்களும் ரஷ்யாவில் தங்கள் சேவையை நிறுத்தியது.
ஏடிஎம் மற்றும் கிரடிட் கார்டு வழங்கும் அமெரிக்க நிறுவனங்களான மாஸ்டர் கார்ட், விசா நிறுவனங்கள் இனி ரஷ்யாவுக்கு சேவை வழங்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளது. இதனால் ஆன்லைன் பணப்பரிமாற்றம் மேற்கொள்ள முடியாமல் மெட்ரோ ரயில் நிலையங்கள், வணிக வளாகங்களில் ரஷ்ய மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். ரஷ்யாவில் பிஎம்டபுள்யூ கார் உற்பத்தியை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதே போல் ரஷ்யாவில் இருந்து கார் ஏற்றுமதியையும் நிறுத்துவதாகவும் பிஎம்டபுள்யூ கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே ரஷ்யாவுக்கு செல்லும் அனைத்து நிதி உதவிகளையும் நிறுத்தி வைப்பதாக உலக வங்கி அறிவித்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.