சட்டப்பேரவையை கூட்டும் நேரத்தை மாற்றாமல் மேற்கு வங்க ஆளுநர் தொடர்ந்து முரண்டு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், ஆளுநர் ஜெகதீப் தங்காருக்கும் எல்லா விவகாரங்களிலும் மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில், சட்டப்பேரவையை வரும் 7ம் தேதி கூட்டும்படி தங்காருக்கு அரசு பரிந்துரை செய்தது. அது, விதிமுறைப்படி இல்லை என்று ஆளுநர் திருப்பி அனுப்பினார். பின்னர், புதிதாக அனுப்பப்பட்ட பரிந்துரையில். மார்ச் 7ம் தேதி அதிகாலை 2 மணிக்கு பேரவையைக் கூட்டும்படி தெரிவிக்கப்பட்டது.

இதை அப்படியே ஏற்ற தங்கார், அதிகாலை 2 மணிக்கு பேரவையை கூட்டும்படி உத்தரவிட்டார். இது, அதிர்ச்சியை அளித்தது. பரிந்துரை கடிதத்தில் ஏற்பட்டுள்ள பிழை (பிற்பகல் 2 மணி) குறித்து  முதன்மை செயலாளர் ஹரி கிருஷ்ணா ஆளுநர் தங்காரை நேற்று நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார். ஆனால், அதையும் ஏற்க மறுத்த தங்கார், எழுத்துப்பூர்வமாக விளக்க கூறிய திருப்பி அனுப்பினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.