போராட்ட களத்தில் பிறந்தநாள்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று 36-வது நாளை எட்டியுள்ளது. விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு, விவசாய சங்கங்களுடன் நேற்று 6-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்த பேச்சுவார்த்தையில் 4 கோரிக்கைகளில் 2-ல் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அந்திரி தெரிவித்துள்ளார். இதையடுத்து, 7-ம் சுற்று பேச்சுவார்த்தை ஜனவரி 4-ம் தேதி நடைபெற உள்ளது.

இதனையடுத்து, தனது மகளின் பிறந்தநாளை போராட்ட களத்திலேயே கொண்டாட அந்த விவசாயி திட்டமிட்டார்.

அதன்படி, போராட்ட களத்திலேயே அந்த விவசாயின் மகள் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.