பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: 2-வது பயிற்சி ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றி

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் வருகிற 4-ந் தேதி முதல் ஏப்ரல் 3-ந் தேதி வரை நடக்கிறது. இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 6-ந் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இதையொட்டி தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகிறது. இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் 2 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.