சென்னையில் கொசு தொல்லை இருக்காது… சூப்பர் பிளான்!!!

சென்னையில் கொசு ஒழிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக நீர் நிலைகளில் டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது. சென்னை மாநகராட்சி சார்பில் கொசுக்களால் பரவும் நோய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக தான் இந்த டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 3,463 பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.