பிரபுவின் 64 ஆம் ஆண்டு பிறந்த தினம்.
இளைய திலகம் பிரபுவின் 64 ஆம் ஆண்டு பிறந்த தினம்( 31.12.2020)
இன்று இளையதிலகம் பிரபுவின் 64 வது பிறந்த தினம் .நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திரை வாரிசு பிரபு.1982 இல் இயக்குனர் சி.வி.ராஜேந்திரனின் இயக்கத்தில் வெளியான “சங்கிலி”திரைப்படத்தில் தனது தந்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இணைந்து “ராஜாளி”என்ற பாத்திரத்தில் நடித்து தமிழ்த்திரையில் அறிமுகமானார்.
தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,
ஆங்கிலம் உட்பட சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்தவர் பிரபு.இவரின் சிறந்த நடிப்பில் வெளியான “சின்னத்தம்பி”
அமோக வெற்றி கண்ட படம்.இப்படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக தமிழ்நாடு மாநில அரசு விருது பெற்றார். இவரின் 100வது படம் “ராஜகுமாரன் “தந்தை சிவாஜியுடன் ஒரு தடவையும்,சிவாஜி மறைந்த பின்
ஒரு தடவையும் இலங்கை வந்தார். பெரிய
நடிகரின் மகன் என்ற பந்தா துளிகூட இல்லாமல் அனைவரிடமும் அன்பாக பழகினார் பிரபு.இலங்கை ரசிகர்கள் மீது சிவாஜி கணேசன் குடும்பம் மிகுந்த அபிமானம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. பிரபுவை பல தடவைகள் அன்னை இல்லத்தில்
(சிவாஜி வீடு )இவரை நான் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இலங்கை ரசிகர்கள் சார்பாக எமது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் …
செய்தி சதீஷ் கம்பளை இலங்கை