வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு குறித்து ராகுல் காந்தி கருத்து

டெல்லி: வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு குறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலையை மீண்டும் உயர்த்தியதன் மூலம் சாதாரண மக்கள் சந்திக்கும் துயரங்களுக்கும் தங்களுக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை என்பதை மோடி அரசு தெளிவுபடுத்தியுள்ளது  என அவர் கூறியுள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.