நாகர்கோவிலில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாகர்கோவிலில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க. பிரமுகரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது. 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ்.