வெள்ளியங்கிரி மலையேற பணம் வசூலிக்காததால் பக்தர்கள் மகிழ்ச்சி!!!
கோவைக்கு மேற்கே தென்கயிலாயம் என அழைக்கப்படும், பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்குள்ள, கோவில் அடிவாரத்திலிருந்து செங்குத்தாக உள்ள 6 மலைகளை கடந்துச் சென்று, 7வது மலையில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ள கிரிமலை ஆண்டவரை தரிசிக்கின்றனர். மகா சிவராத்திரி விழாவையொட்டி பூண்டி வெள்ளியங்கிரி மலையில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரை சாமி தரிசனம் செய்ய பணம் வசூலிக்காததால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஜஸ்டின்.