நான் முதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் பேச்சு!!!

கல்லூரி பட்டத்தை தாண்டி தனித்திறமை இருந்தால்தான் போட்டி நிறைந்த உலகில் வெல்ல முடியும். அகத்தடைகளை உடைத்து எறிய தொடங்கப்பட்ட திட்டம் தான் ‘நான் முதல்வன் திட்டம்’  என்று ஸ்டாலின் நம்பிக்கை கூறினார். நான் முதல்வன் திட்டம் மூலம் அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்படும். படிப்பு என்பது பட்டம் சார்ந்ததாக மட்டும் அல்ல திறமை சார்ந்ததாக மாற வேண்டும். வேலை என்பது சம்பளம் சார்ந்ததாக இல்லாமல் திறன் சார்ந்ததாக மாற வேண்டும். பெற்ற தாய் போல் மாணவர்கள், இளைஞர்கள் நலனில் அக்கறை கொண்ட திட்டம் தான் நான் முதல்வன் திட்டம் என்று தெரிவித்தார்.

தமிழ் மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி