உலகின் பெரிய விமானம் அழிப்பு!

உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறுகையில், ‘உக்ரைனின் ‘ட்ரீம்’ என்று அழைக்கப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏஎன்-225 ‘மிரியா’ உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமாக தகுதி பெற்றது. ரஷ்ய படைகள் தாக்குதலால், கிவ்வுக்கு வெளியே உள்ள ஹோஸ்டோமல் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, ம்ரியா சரக்கு விமானம் அழிக்கப்பட்டது. நாங்கள் விமானத்தை மீண்டும் உருவாக்குவோம். வலுவான, சுதந்திரமான மற்றும் ஜனநாயக உக்ரைன் என்ற எங்கள் கனவை நிறைவேற்றுவோம்’ என்று கூறி உள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.