போரில் 352 மக்கள் பலி!!!

போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைன் தரப்பில் 14 குழந்தைகள் உட்பட 352 பொதுமக்கள் போரில் பலியாகி உள்ளனர். 1,684 பொதுமக்களும், 116 குழந்தைகளும் காயமடைந்துள்ளதாக உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா உதவி: இந்தியாவில் உள்ள உக்ரைனுக்கான தூதர் கேட்டுக் கொண்டதன்பேரில், அந்நாட்டிற்கு மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள இந்திய அரசு முன்வந்துள்ளது. இதற்காக உக்ரைனுக்கு மருந்து, உணவு, உடைகள் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.