நீர்நிலையில் கட்டப்பட்ட அம்மா உணவகம் இடிப்பு!!!
மாதவரம் மண்டலத்தில் உள்ள நீர்நிலையில் கட்டப்பட்ட அம்மா உணவகம், நீதிமன்ற உத்தரவால் இடிக்கப்பட்டது.சென்னை மாதவரம் மண்டலத்தின் புதிய 32வது வார்டில், புத்தகரம், கடப்பா சாலையில், 1.5 ஏக்கர் பரப்பளவில், ‘பரப்பன் குளம்’ இருந்தது. கடந்த, 2015ம் ஆண்டு, அ.தி.மு.க., ஆட்சியில் மாநகராட்சி அதிகாரிகள், பரப்பன் குளம் நீர்நிலையின் ஒரு பகுதியில், ‘அம்மா’ உணவகம் கட்டி, மக்கள் பயன்பாட்டிற்கு திறந்தனர்.இது குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், கடந்த 10ம் தேதி, நீர்நிலையில் கட்டப்பட்ட அம்மா உணவகத்தை இடித்து அகற்ற வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, 24ம் தேதி இரவு, மாநகராட்சி அதிகாரிகள், அம்மா உணவகத்தை இடிக்கும் பணியை துவங்கினர்
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.