ஏரியில் கொட்டப்பட்ட ரேஷன் கோதுமை!!

 ஊட்டி ஏரியில், ரேஷன் கோதுமை மூட்டை, மூட்டையாக கொட்டப்பட்டது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம், ஊட்டியில், சில ரேஷன் கடைகளில் இருந்து அரிசி, கோதுமை ஆகியவை, புரோக்கர்கள் வாயிலாக கேரளா, கர்நாடக மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக புகார் உள்ளது. இந்நிலையில், ஊட்டி மரவியல் பூங்கா அருகே உள்ள ஏரியில், மூட்டை, மூட்டையாக ரேஷன் கோதுமை கொட்டப்பட்டுள்ளது. இது குறித்து, அப்பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.