செபி’க்கு முதன் முதலாக ஒரு பெண் தலைவர்!!!

:பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’யின் புதிய தலைவராக, மாதவி புரி புச் நியமிக்கப்பட்டுள்ளார்.செபியின் தலைவராக பதவி வகித்து வந்த அஜய் தியாகியின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், புதிய தலைவராக மாதவி புரி புச் நியமிக்கப்பட்டு உள்ளதாக அரசு அறிவித்துஉள்ளது. செபியின் தலைவராக பெண் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதன் முறை.இது குறித்து, அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:செபியின் தலைவராக அதன் முன்னாள் முழு நேர உறுப்பினரான மாதவி புரி புச் நியமிக்கப்பட்டுஉள்ளார்.துவக்கத்தில் மூன்று ஆண்டு காலத்துக்கு இவரை நியமனம் செய்ய, அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதல் அளித்துஉள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.