பழவேற்காடு முகத்துவாரம் பிரச்னையில் தீர்வு….
பழவேற்காடு: பழவேற்காடு முகத்துவாரத்தில், 27 கோடி ரூபாயில் ‘கான்கிரீட்’ சுவர் அமைப்பதற்கு, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி வழங்கி உள்ளதால், 56 கிராம மீனவர்கள் நிம்மதி அடைந்துள்ளதுடன், விரைவில் பணிகளை துவங்க மீன்வளத் துறை திட்டமிட்டு உள்ளது. . கடல் சீற்றத்தாலும், பருவநிலை மாற்றத்தினாலும், மண் திட்டுக்கள் உருவாகி, முகத்துவாரம் அடைத்து, மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க முடியாத சூழல் அடிக்கடி ஏற்படுகிறது. இங்கு கான்கிரீட் சுவர் எழுப்பி, நிரந்தர முகத்துவாரம் அமைக்க வேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர் அங்கு நபார்டு வங்கி நிதிஉதவியின் கீழ், 2019ம் ஆண்டு, 27 கோடி ரூபாயில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.