குரூப் – 2 முதல் நிலை தேர்விலும் தமிழை கட்டாயமாக்க வலியுறுத்தல்…
அரசுத்துறை பணிக்கான, டி.என்.பி.எஸ்.சி., குரூப் – 2 தேர்வின் முதல் நிலையிலும், தமிழை கட்டாயமாக்க கோரிக்கை எழுந்துள்ளது. முதல்நிலை, பிரதான தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய மூன்று நிலைகளில், இந்த தேர்வு நடத்தப்படுகிறது. முதல் நிலை தேர்வு தமிழ், ஆங்கிலம் என்ற இரண்டு வகையாக நடத்தப்படும்; ஏதாவது ஒரு மொழியை தேர்வு செய்து தேர்வு எழுதலாம். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் பிரதான தேர்வில் பங்கேற்க வேண்டும். இந்த தேர்வில், தமிழ் மொழித்தாள் கட்டாயம். இந்நிலையில், முதல்நிலை தகுதி தேர்வு எழுதும் அனைவருக்கும், தமிழ் மொழியை கட்டாயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.